திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம்

திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் . இதனால், துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.
இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்து தமிழக பாஜக தலைவர் முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025