தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் , கடலூர், ஈரோட்டில் தலா ஒரு வாக்குச்சாவடி என தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்ஆணைய தலைமை அதிகாரி நேற்று அறிவித்திருந்தார். இதற்க்கு தற்போது தேர்தல் தலைமை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ; தேர்தல் நாளில் தர்மபுரியில் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களுடன் இருந்தது கண்டறியப்பட்டதாலும், இதனால் வாக்காளர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு, மேலும், திருவள்ளூரில் பூந்தமல்லி வாக்குச்சாவடியில், மாதிரி […]
ஈரோடு மாவட்டம் நாடார்மேடு எனும் பகுதியில், உள்ள மதுக்கடையில் மஞ்சுநாதன் செந்நிதில் குமார் ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாதத்திற்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மஞ்சுநாதனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அடுத்து மஞ்சுநாதனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அருகில் ள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு […]
தூத்துக்குடியில் சென்றாண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பெரும் போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் போது, போலீசார், போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 13பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தாண்டு மே 22இல் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்க படுகிறது. இதற்க்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மே 22 இல் ஒரு தனியார் பள்ளியில் […]
13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது. ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 7 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை […]
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு தெரிவித்தார்.அதில் தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடியிலும், தேனியில் 2 வாக்குச்சாவடியிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். பூந்தமல்லி மேட்டுப்பாளையத்தில் […]
அ.ம.மு.க. – தி.மு.க. என இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் ஆட்சியை அகற்ற முடியும் என்ற யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. […]
தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி கூறுகையில், நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூலூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை. இதற்கு உதாரணம் பொள்ளாச்சி சம்பவம் ஆகும்.மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று […]
சென்னையில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று பல்கோரியாவை சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இவர் பெயர் வெளிகேவ் என கூறப்பட்டுள்ளது. இவரிடமிருந்து 10 லட்சம் பணம், மடிக்கணினி 45 ஏடிஎம் கார்டுகள், ஏடிஎம் தயாரிக்கும் இயந்திரம் போன்றவை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இது தோடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. DINASUVADU
தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெற தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் .வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும். தேனிக்கு மாற்றப்பட்ட […]
தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. நேற்று கோயம்புத்தூரில் இருந்து, பயன்படுத்தப்படாத வாக்கு பெட்டிகள் தேனிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வழக்கமான ஒன்றுதான். ஒரு வேளை மறு வாக்குப்பதிவு நடைபெற்றால் தேவைபடும் என்பதால், இந்த மற்றம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதனால், எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேர்மையாக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது […]
தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் […]
46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தால் அதை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7-கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் 5-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்றது. இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் […]
திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். திமுகவின் பழைய கதையை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது. திமுக என்றாலே நாடக அரசியல்தான்.மறைமுகமாக திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்துள்ளார். மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் .திமுக அமமுக கூட்டணி என்று […]
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7-கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் 5-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.மக்களவைதொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.மேலும் தேனி உள்பட 46 […]
நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த பழை பெய்தது. கோடை வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும், மதுரை அரசு மருத்துவமனையில் இந்த கன மழை சோகத்தை கொடுத்துள்ளது. நேற்று மதுரையில் அரசு மருத்துவமனையில், நேற்று கனமழை பெய்த காரணத்தால் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிசந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய மூவரும் மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற தகவல் […]