ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எழும்பூரில் பணப்பட்டுவாடாவானது அதிமுகவின் முன்னாள் எம்.பி. பாலகங்கா வீட்டில் வைத்து தைரியமாக அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கொடுக்கபடுகிறது.ஆர்.கே. நகரில் பண மழைதான் பொழிகிறது. சென்னை எழும்பூரில் உள்ள முன்னாள் எம்பி. பாலகங்கா அடையாள அட்டையுடன் 300க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 6000 பணம் பெற்று செல்கின்றனர் என வீடியோ பதிவு வெளிவந்துள்ளது.
நாகப்பட்டினதில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு நாகை காவல்துறை அனுமதி மறுத்தது.எனவே காவல் துறையினர்கும் பா.ஜ.க.வினர் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்ப்பட்டது இதனால் அத்துமீறி களத்துக்கு வந்தார் ராஜா. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் படு பயங்கரமாக இயங்கி வருகிறது. வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து தற்போது வரை இன்னும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பணபட்டுவாடா புகார் காரணமாக தான் ஆர்கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு தொகுதிக்குள் வரும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்பட்டு தான் உள்ளே அனுமதிக்கபடுகிறது. தற்போது திமுகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பூங்கோதை , ஆலடி அருணா, ஆகியோர் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்வதாக கூறி சாலை மறியலில் […]
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் . இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய […]
ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைப்பு. இருதினங்களுக்கு முன்புதான் இரு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் உடைத்ததாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் புகார் செய்தனர்…
சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???
திருச்சி, சமயபுரம் அருகே கூத்தூரில் வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13பேர் காயமடைந்தனர். இவர்கள் பழனி கோயிலுக்கு வேனில் சென்றவர்கள். கோயிலுக்கு சென்று விட்டு சேத்தியாதோப்புக்கு திரும்பும்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ள்ளது.
ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட தமிழக பாஜக சார்பில் தமிழ் திரைப்பட இயக்குனரான கங்கை அமரன் அவர்கள் போட்டியிட முதலில் அறிவிக்கபட்டார். பிறகு சில காரணங்களால் தேர்தல் ரத்தானது. மீண்டும் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டபோது தமிழக பாஜக சார்பில் கங்கை அமரனுக்கு பதிலாக வேறு ஒரு நபரை களம் இறக்கி உள்ளது. இதனை குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். அதி, ‘தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் போட்டியிடவில்லை எனவும், மேலும், தகுதியான நல்ல […]
கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீர மரணமடைந்தார். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு காவல்துறையினர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெரிய பாண்டியனின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை முதலமைச்சர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இரண்டாவது முறையாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக தொண்டர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜூ, தொகுதி வளர்ச்சிக்காக முதலமைச்சர் என்று கூறிவிட்டு உடனடியாக திருத்தம் செய்து பின்னர் அமைச்சர் மதுசூதனன் எனக் குறிப்பிட்டார். கடந்த மாதம் 4ஆம் தேதியன்றும் அமைச்சர் […]
இனி வரும் தேர்தல்களில் வேட்புமனு பரிசீலனையின்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ மனு பெற்று தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை.
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்திடம் ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனும், ஜெயலலிதாவின் அண்ணன் மருமகன் மாதவனும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட 10 மருத்துவ அறிக்கைகளுக்கும், இறந்த பின் அளித்த அறிக்கையும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக […]
நல்லெண்ண அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை அரசு..!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில் சென்னையில் மீண்டும் போராட்டம் – ஜாக்டோ-ஜியோ.
ஜெயலலிதா கைரேகை பதிவுகளை தடயவியல் சோதனைக்கு அனுப்பக்கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம்.
நடப்பாண்டில் செம்மரம் கடத்தியதாக 10,558 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்.
படுக்கை நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் – அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேச்சு.
கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொள்ள வந்ததற்காக எதிர்ப்பு கிளம்பியது. திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார். திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், […]