அருப்புக்கோட்டையில் சந்தானம் குழு, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, இன்று விசாரணை நடத்துகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி […]
பாமக நிறுவனர் ராமதாஸ், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ஆம் ஆண்டில் […]
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி முதல் மெரினா உழைப்பாளர் சிலை முன்பாக தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர். இதனிடையே, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க. குறித்த ஹெச் .ராஜாவின் கருத்து தரம் தாழ்ந்தது என்று தெரிவித்துள்ள நிலையில், இதற்கும் ஹெச்.ராஜாவிடம் இருந்து அட்மின் தவறு என்று பதில் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து […]
கூட்டுறவு சங்க மேலாளர் , ஈரோடு அருகே தமிழக அரசின் விலையில்லா வேட்டிசேலையை வெளிமார்கெட்டில் விற்று 5 கோடியே 30 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார். சென்னிமலையில் இயங்கி வரும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றினார். இச்சங்கத்திற்கு தமிழக அரசுக்காக விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலும் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் […]
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நீட் தேர்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி வருகிறார் . அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் 2016-17ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வியில் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் ஆக வேண்டுமென்ற தீராதா கனவு கொண்டிருந்தவர். அதுவரை மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக கல்வித் திட்டத்தில் 2017ல் மத்திய அரசின் நீட் […]
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood என்ற மொபைல் ஆப் ஆனது தற்சமயம் மிக அதிகமான பயனர்களை எட்டியுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய நேரங்களில் குருதி தேவைப்பவர்களுக்கு அவர்களின் இடம் அறிந்து, அருகில் இருக்கும் குருதி கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்துவைக்கிறது இந்த செயலி. மேலும் குறப்பிட்ட நேரத்தில் குருதியினை வழங்கும் சேவையினை MBlood செயலி செய்து வருகிறது என்பது […]
ஹெச் .ராஜாவின் பாஜகவின் கலாச்சாரத்திற்கு உடன்பாடானவை அல்ல என தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை […]
பள்ளிக்கல்வித்துறை,தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி துவங்கி மே 7-ஆம் தேதி நிறைவடையும். […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் […]
உசிலம்பட்டி:சின்னவெள்ளை மனைவி வீரம்மாள் இவர் மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள மல்லப்புரத்தைச் சேர்ந்தவர்.இவர் கணவர் இறந்து விட்டதால் தனி வீட்டில் வசித்து வந்தார். 2 மகன்கள் இவருக்கு உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் தங்கச்சாமி அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “நீ மூத்த மகனுக்குத்தான் எல்லாம் செய்கிறாய்” எனக்கூறி தாய் வீரம்மாளிடம் தங்கச்சாமி தகராறு செய்துள்ளார்.இந்த சமயத்தில் நேற்று மதியம் வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த வீரம்மாளின் தலையில் தங்கச்சாமி திடீரென கல்லைத்தூக்கிப் […]
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக, தெரிவித்திருக்கிறார் டெல்லியில், 15ஆவது நிதி ஆணைய தலைவர் கே.என்.சிங்கை, எம்.பிக்களோடு சென்று சந்தித்தப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதையும், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு நிதி வழங்க அறிவுறுத்தியிருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர் […]
தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் […]
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட […]
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது” போன்று உள்ளது என தெரிவித்துள்ளார். ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் […]