பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் தோப்புக் கரணம் போட வேண்டும் என்று கூறியுள்ளார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனைத்துகட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுவது கண்டிக்கதக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் அளித்த பேட்டியில், அரசாங்கம் ஒயின்ஷாப்புகளை நடத்தவில்லையென்றால், கள்ளசாராயம் குடித்து இறந்துபோவார்கள் குடிகாரர்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “இப்போது அனைவரும் ஒயின்ஷாப்பை மூட வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், அப்படி மூடினால் குடிகாரர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோவார்கள். குடிகாரர்கள் அவர்களாகவேதான் திருந்த வேண்டும் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சை கிளப்பியுள்ளது. மேலும் தகவலுக்கு […]
ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்கப்படுவதால், ராமநாதபுரம் கிராம மக்கள் தவிப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாயாகுளம் ஊராட்சியில் சின்னமாயாகுளம், திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விவேகானந்தபுரம், பாரதி நகர், முத்துராஜ் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் தனியார் வண்டிகள் மூலம் ஒரு குடம் […]
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சிற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி. வேலூர் மாவட்டம் அரியூரில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல், கமலும் காணாமல் போய்விடுவார் என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கூடிய விரைவில் தேர்தல் வரும். அதில் தேமுதிக கட்சியினரா அல்லது அதிமுக கட்சியினரா யார் காணாமல் போவார்கள் என்று மக்களுக்கு தெரியவரும். காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசும், […]
மு.க.ஸ்டாலின் கூறியது , பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், மத்திய அமைச்சரை சந்திக்கக் கூறினால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ள அவர் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய மு.க.ஸ்டாலின், நேற்று முதலமைச்சரை சந்தித்து பேசியது குறித்து விவரித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணையம் பண்ணுவதை அரசு கைவிட்டுவிட்டதால், தனியார் முதலாளிகள் தங்களின் லாபத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ராவை கடத்தியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவரது மகள் கரிஷ்மா போத்ராவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. சினிமா பைனான்சியர் போத்ரா, தி.நகரில் தங்கியிருந்த கரிஷ்மா கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். போத்ரா கந்துவட்டிக்கு பணம் கொடுத்து கைதானவர், அதனால் அவரது எதிரிகள் யாரும் கடத்தியிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார் . சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவருக்கு இன்று மதியம் மருத்துவமனையில் சிகிச்சைகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் அவர் கேரள விருந்தினர் […]
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் 17 துணைவேந்தர்கள் மற்றும் 18 பல்கலைகழக பதிவாளர்கள், உயர்கல்விதுறை செயலர் கலந்து கொண்டனர். பல துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்ம முறைகேட்டில் ஈடுபடும் துணை வேந்தர்கள் மீது கடும் […]
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு, டிடிவி தினகரன் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் தன் பக்கம் வருமாறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் டிடிவி தினகரன் பேசி வருவதாக புகார் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கப்பல் மாலுமியின் மனைவி சென்னை காசிமேட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இராயபுரத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி பிரேம்குமாருக்கும் காசிமேட்டைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு பிரேம்குமார் மும்பை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று அனிதாவுடன் செல்பேசியில் தொடர்புகொண்ட பிரேம்குமார், தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணான அனிதா வீட்டில் […]
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த திமுக – அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவையைக் கூட்டி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறினார். இதுகுறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”நேற்றைய தினம் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்டு, ‘முதல்வர் தங்களோடு பேசுவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார், காலை 10:30 மணியளவில் வர முடியுமா?’ என்று […]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர் நீதிமன்றம் திருமண வயதை எட்டாத மாணவருக்கு போலி சான்று மூலம் பதிவு திருமணம் செய்து வைத்த பூந்தமல்லி சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் மகாலட்சுமி. சென்னையை சேர்ந்த மைக்கேல் விக்னேஷ் என்பவரை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். இதனை அடுத்து, மைக்கேல் விக்னேஷிடம் சட்டவிரோத காவலில் தனது மகள் உள்ளதாகவும், அவரை மீட்டு தரக் கோரியும் கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் […]
தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பதால், சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட […]
உடல்நலக்குறைவால் கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அதேசமயம், கேரள முதல்வர் அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வெளியாகும் மாநிலமொழி நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் […]
வரும் 15ஆம் தேதி 2018-2019ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், வரும் 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு […]
ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் உண்மையான கள நிலவரம் என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், சூழலியல் ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஓஎன்ஜிசியின் 71 பெட்ரோலியக் கிணறுகளில் ஒன்றுக்குக் கூடச் சுற்றுச்சூழல் உரிமம் இல்லை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,66,934 மாணவர்கள் மற்றும் 40,686 தனித்தேர்வர்கள் என […]
சென்னையில், சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் ஐநா சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சிரியாவில் அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐநா சபை உடனடியாக தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். […]