கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மேலும் 5 நாள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ப.சிதம்பரத்திடமும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. 2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டுவதற்கு முறைகேடாக உதவியதாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் […]
ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல்ஹாசன் கட்சி பேச்சாளர்களாக நியமனம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இன்று கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மெளர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், […]
ஆர்.கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தமிழக அரசின் மெகா ஊழலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் விரைவில் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவசப் பொருட்களை பொறுவதற்கு மக்கள் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர், பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் விசாரணைக்கு அழைக்காமல் இருப்பது ஒரு […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கைத்தறி நெசவாளர் சங்கங்கள் ஊக்கத் தொகை பெற புதிய நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இதற்கு முன் நிபந்தனைகள் ஏதுமில்லாத நிலையில், தற்போது ஆண்டு பரிவர்த்தனை 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஊக்கத் தொகை பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே […]
சென்னையில் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடம், சென்னை எழும்பூர், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, […]
இன்று 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். தமிழ் முதல் தாள் தேர்வு தவிர அவரவர் மொழிப்பாடங்களை எடுத்த மாணவர்களும் அந்தந்த மொழிப் பாடத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 794 மையங்களும் சென்னையில் மட்டும் 156 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. […]
நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவி ஏதும் தேவை இல்லை என்றும் தொண்டர்களில் ஒருவராக இருக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அ வர், ஸ்டாலினின் அரசியல் வாரிசாக தாம் வரவில்லை என்றும் சாதாரண தொண்டனாக இருக்கவே விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சங்கரமட பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 2016 இல் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. ஜெயேந்திர சரஸ்வதி வாழ்க்கைக் குறிப்பு: 1.1935 ஜூலை 18-ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள […]
பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் , செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கெடுதல் செய்தவர்களுக்கும் நல்லது நினைக்கும் வன்மம் இல்லாத பெரிய மகான் சங்கராச்சாரியார் என்று கூறி கண் கலங்கினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்ந்து அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறிய சுப்பிரமணியன் சாமி, சி.பி.ஐ. பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தபோதும், அவர் தொடர்ந்து பொய்களையே பேசி வந்ததாக குற்றம்சாட்டினார். கார்த்தி சிதம்பரம் நிச்சயம் சிறைக்கு செல்ல வேண்டியவர்தான் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தின் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தது அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று தெரிவித்த […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறு குழந்தைகள் கூட செல்போனை பார்த்து பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களை இழைப்பதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா என்றாலே சர்ச்சைக்கு பெயர்போனவர்தான்.இவர் பொழுதுபோக்கே சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏதாவது கருத்து ஒன்றை பதிவுசெய்து அதை சர்ச்சையாக மாற்றுவதே இவர் வேலை ஆகும்.பின்னர் இதனால் பல்வேறு கருத்து யுத்தங்கள் நடைபெறும்.இதில் பல்வேறு கருத்துகள் பகிரங்கமாக பகிரப்படும்.இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தற்போது மீண்டும் ஒரு சர்சைக்குரிய கருத்தை கூறி இளைஞரிடம் கருத்து யுத்தம் நடத்தியுள்ளார். அதாவது ஹெச் .ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்து என்னவென்றால்,”திரிபுரா முதல்வர் மாணிக்சர்கார் ஊழல்வாதி என்றும் இடதுசாரிகள் […]
கார்த்தி சிதம்பரத்தை , ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக முதலீடுகளை பெற உதவியது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து 305 கோடி நிதி பெற உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் […]
இன்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் காலமானார். காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83.சங்கரமடம் அருகே உள்ள சங்கரா மருத்துவமனையில் இன்று காலை அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பொறுப்பாளர் நடன சாஸ்திரி ஜெயேந்திரர் காலமானதை உறுதிப்படுத்தினார். தகவல் அறிந்து சங்கர மடத்தின் அருகே பக்தர்கள் பொதுமக்கள் திரண்டதையடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயேந்திரரின் உடல் பொதுமக்கள் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, , அதிமுக அரசைப்போல், வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில்லை எனக் கூறினார். மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திமுக, தமிழக நலனுக்கான எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றியதில்லை என்றும் அவர் சாடினார். மத்திய […]
மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று பேசும் போது “காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. மத்திய அரசு தமிழகத்தையும், கர்நாடகத்தையும் இரண்டு கண்களைக் போல் பார்க்கிறது” என கூறியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் இறுதியாக காவிரி பிரச்சனையில் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு 6 வார காலத்திற்குள் […]
சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொம்பன் காளை பங்கேற்று இறந்துவிட்டது. அக்காளை வாடிவாசல் அருகே இருந்த தென்னைமர கட்டையில் மோதி சுருண்டு விழுந்து இறந்தது. தலையில் கட்டை இடித்ததால் தான் இறந்ததாக கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், கொம்பன் மர்மமாக இறந்ததில் எழுந்த சந்தேகத்தின் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று புளூகிராசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் கொம்பன் காளை எப்படி இறந்தது என சோதனையிட […]
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளினை அடுத்து இன்று அவரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அதனை திறந்து வைத்த முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது முதல்வர் பேசுகையில், “திமுக என்ற எஃகு கோட்டையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் உருவாக்கினர். இந்த ஆட்சியை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் பழனிசாமி, தணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் திறந்து வைத்ததோடு, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர். இன்று திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்குப் பீடம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. சுமார் ஏழு அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் […]