ஜெ.ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி. இவர் 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மைசூரில் பிறந்தார்.1961ம் ஆண்டில், தனது இளம் வயதிலேயே திரையுலகில் கால்பதித்தார்.இவர் சுமார் 140 படங்களில் நடித்துள்ளார். பின்னர் 1982ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றிய இவர்,6 முறை தமிழகத்தின் முதல்வராக பணிபுரிந்துள்ளார். மேலும்,2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு மத்திய அரசு விடுவிக்க உள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 129 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 109 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்,அவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 20 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை […]
இன்றைய நாளின் தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2,914 காசுகள். இன்றைய நாளின் வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.41.60 காசுகள். அதேபோல் பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.16 காசுகள். டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 65.51 காசுகள். இன்றைய வெப்பநிலை நிலவரம்: சென்னை :அதிகபட்சமாக 32°C, குறைந்தபட்சமாக 26°C திருச்சி : அதிகபட்சமாக 34°C, குறைந்தபட்சமாக 23°C. மதுரை : அதிகபட்சமாக 35°C, குறைந்தபட்சமாக 25°C. கோவை : அதிகபட்சமாக 34°C, […]
கடந்த சில தினங்களாக ஏர்செல் சேவையில் குறைபாடு இருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்,நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சடலங்களை கடத்தி விற்பனை செய்துள்ள குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கிறிஸ்தவ அமைப்பு மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள தடிகொண்ட அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஒரு அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் தொழில் தொடங்க எத்தைகைய உதவி தேவைப்பட்டாலும் தம்மை அணுகுமாரும் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஜெயின் சமையத்தை பின்பற்றுவோர்கள் வைத்துள்ள ஜெயின் சர்வதேச வர்த்தக என்கிற அமைப்பின் தொழில் முனைவோருக்கான வர்த்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். அப்போது ஆளுநர் பேசுகையில், “ஜெயின் சமூகத்தினர் தமிழகத்தில் பெரும்பாலான எண்ணிக்கையில் இருப்பதால் தமிழ்பேச […]
சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கே.பாலகிருஷ்ணனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் MP , கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், விசிக துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் அணியில் அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இணைந்தார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம். தினகரன் தரப்பில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்.எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் தான் செயல்படுகிறது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பேசி தீர்க்க வேண்டியது […]
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை அளிப்பதோடு, 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும் பெற்று ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தமிழக கல்வித்துறையோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன […]
அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று தினகரனை நேரில் சென்று சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்த பிரபு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு தான் உள்ளது. இவரை சந்தித்தது எனது தனிப்பட்ட முடிவு. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வந்து தினகரனை சந்திப்பர்.” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் அதிமுக-வில் இருந்து கொண்டு […]
மெட்ரோ குடிநீர் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சத்தியப்ரதா சாஹு தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இச்செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கோனிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.மேலும், இவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதை அடுத்து ராஜேஷ் லைக்கோனிக்கு மாநில தலைமை செயலாளர் பதவி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
காவிரி விவகாரம் குறித்து அணைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில், இன்னும் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். தண்ணீர் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177 டி.எம்.சியாக குறைத்ததை பற்றி எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளையும் சேர்த்து விரைவில் பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும் . […]
இன்றைய நாளின் தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2,909 காசுகள். இன்றைய நாளின் வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.41.40 காசுகள். பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.25 காசுகள். டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 65.58 காசுகள். இன்றைய நாளின் வெப்பநிலை நிலவரம் சென்னை :அதிகபட்சமாக 32°C, குறைந்தபட்சமாக 24°C திருச்சி : அதிகபட்சமாக 34°C, குறைந்தபட்சமாக 25°C. மதுரை : அதிகபட்சமாக 36°C, குறைந்தபட்சமாக 23°C. கோவை : அதிகபட்சமாக […]
ஏர்செல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முழுமையாக முடங்கியதால் அவதியுற்று வரும் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் மாவட்ட தலைமை அலுவலம், ஈரோட்டில் ஏர்செல் சேவை மையம் ஆகியவற்றையும் முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
ராஜு மகாலிங்கம் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினி தனது இயக்கத்தை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் […]
அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை […]
அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை தாங்கள் அழைக்காததாலேயே அவர்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ள அவர், யாரை, எப்போது அழைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கட்சி தொடங்குவது குறித்து நடிகர் கமல்ஹாசன் நற்பணிமன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். அன்று மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, கட்சிக்கான கொடியை வடிவமைப்பது ஆகியவை குறித்துச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் மூத்த […]
அண்ணா பல்கலைகழக நிர்வாகம் தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள், 11 ஆம் வகுப்பு பாடத்தை கூட சரியாக படிக்காமல் கல்லூரிக்கு வந்துவிட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக, வினோத விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நிகர் நிலை பல்கலைகழகங்கள் தவிர்த்து இயங்க கூடிய அனைத்து பொறியியல் கல்லூரிகளும் சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. மொத்தம் உள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் 466 கல்லூரிகளில் தான் இந்த ஆண்டு மாணவர் […]
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது , தி.மு-க நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடைகிறபோது, அதைப் பயன்படுத்தி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எம்.எல்.ஏக்களுக்கு மாதம்தோறும் படி அளக்கப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.