நடிகர் கமல்ஹாசன் தனியார் கைகளில் இருக்கும் மருத்துவம் மக்களுக்கானதாக மாற வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தனது அரசியல் பார்வை மற்றும் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து லெக்சிங்டன் நகரில் தமிழ் மக்கள் மன்றம் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வெறும் திரைக்கலைஞனாக இருப்பது போதவில்லை என்று எண்ணுவதால் அரசியலுக்கு வர எண்ணுவதாக குறிப்பிட்டார். அரசியலுக்கு […]
நவீனமுறையில் டேப் லெட்(tap let) மூலம் சேலம் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்றில் படங்களையும் எழுத்துக்களையும் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகின்றது. ஆசிரியைகளின் புதிய முயற்சியால் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான், நவீன ஆரம்ப கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றது. 1955ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது முதல், கால மாற்றத்துக்கேற்ப தன்னை புதிப்பித்து இன்னும் சிறந்தப்பள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடப்பாண்டு முதலாம் […]
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அன்புமணி ராமதாஸ் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் ஊழலை மத்திய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் சோதனைகள் நடைபெற்ற போதிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அன்புமணி தெரிவித்தார்… […]
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளை இன்று 7வது நாளாக சந்தித்து வருகிறார். காலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த அவர், மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். திமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமூகநீதிக்காக போராடிய ஜெயலிலதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறக்கலாம் என தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் பசுமைப்பூங்காவில் உணவகங்களை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என மாற்றுக்கட்சியினர் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். சமூகநீதிக்காக போராடிய ஜெயலிலதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறக்கலாம் என்றும் அவர் கூறினார். சென்னை பெருநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் பொது இடங்களில் […]
நடிகர் கமல்ஹாசன் காவியை ரஜினி தேர்ந்தெடுத்தால் அவருடன் தாம் கைகோர்த்து அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரையாற்றினார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக் கூறி பேச்சை தொடங்கிய கமல், தமிழகத்தில் கிராமங்களில் இருந்து மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் […]
டிடிவி தினகரன் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி 3 மாதங்களில் கவிழும் என தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழிபாடு நடத்திய பின், ஏழை எளியோருக்கு மூன்றுசக்கர வண்டிகள், தையல் எந்திரங்கள், குக்கர் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தேவையற்ற காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காதது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 12-ஆம் தேதி காலை சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியை தாய்மொழியாக கொண்ட 24 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கட்டாயத் தமிழ் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. 2006-ல் தமிழகத்தில் தமிழை கட்டாயமாக்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் தேர்வு கட்டாய உத்தரவுக்கு எதிராக சென்னை ராயபுரம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 24 பேர் வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் இந்தி வழியில் ஆரம்பக் கல்வி பயின்றதாக்வும், ஆறாம் வகுப்புக்குப் பிறகும் தமிழ் ஆசிரியர் நியமிக்கப்படாததால் இந்தியிலேயே படித்து வருவதாகவும், அவர்கள் தெரிவித்திருந்தனர். மனுவை […]
வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு வந்த போலி நபரை காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் தீபாவின் வீடு உள்ளது. இங்கு இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த நபர் சோதனைக்கு மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமான […]
பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கடலுக்குள் குதிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஓன்று வெளியிடுவதற்காக, இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மேலிருந்து கடலுக்குள் குதித்துள்ளார். பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவற்றில் நின்றுகொண்டிருக்கும் அந்த இளைஞர் சக இளைஞர்கள் உற்சாகப்படுத்த, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஆபத்தான முறையில் கடலுக்குள் குதித்துள்ளார். ஏற்கனவே ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் செல்பி […]
நடிகர் கமல்ஹாசன் கூறியது , நடிகர் ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வார இதழில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி, இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று ரஜினி கூறிய கருத்தை வழிமொழிவதாக தாம் ஏற்கனவே அறிவித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார். இருவரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இருவருடைய கொள்கைகளும் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் மாணவர் குடும்பத்திற்கு 48 மணி நேரத்தில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் மாணவர் உயிரிழந்தால் 1 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் […]
சென்னை உயர்நீதிமன்றம் பணமோசடிப் புகாரில் புகாரில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அமைச்சராக்குவதாகக் கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி ராமச்சந்திரன் காவல் ஆணையர் […]
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களையும் குறைகளையும் கேட்டு வருகிகிறார். அண்ணா அறிவாலயக் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் சந்திப்பில் இன்று திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். கட்சி வளர்ச்சி, தேர்தலில் கட்சியின் முடிவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். தேனிமாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்துத் தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெரியகுளத்தில் இருந்து அகமலை செல்லும் சாலையில் கண்ணக்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் நியூட்ரினோ திட்டம் பற்றிய செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம், நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார். ஆய்வுக்குப் […]
மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி வரும் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. 2.57 சதவீத காரணி ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின் வாரிய தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில் 5 பேர் கொண்ட மின் வாரிய நிதி நிலை அதிகாரிகள் குழு, அவசர அவசரமாக அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த […]
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களைப் போன்று தமிழகத்திலும் கூகுள் மையம் அமைக்க கோரியிருப்பதாகத் தெரிவித்தார். இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னையில் இணையதளத் தொடர்பு பாதிக்காமல் தடுக்க […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சி மாற்றம் குறித்த டிடிவி தினகரனின் கருத்து, வாயில் வடை சுடுவது போல் உள்ளதாக விமர்சித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், டிடிவி தினகரனின் தற்போதைய நிலைமை சிரித்துக் கொண்டே அழுபவர் தான் என்றும் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.