2 ஆயிரத்து 548 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் – பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் […]
கொள்ளையன் நாதூராம் ராஜஸ்தானில் தனது சொந்த ஊரில் மிகப்பெரிய அரசியல் வாதியாக வலம் வருவதற்காக கொள்ளை அடித்து பணம் சேர்த்தாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கொளத்தூரில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை கடந்த நவம்பர் மாதம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ராஜமங்கலம் போலீசார் நாதுராம், தினேஷ் செளத்ரி, பக்தா ராம் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்றது. 6 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று […]
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சந்தித்தனர். பின்னர் சபாநாயகர் தம்பிதுரை எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பட்டாசு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை . பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு உற்பத்திக்கு எந்த […]
டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்குமாறு, உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையம், அவர்களது அணியே அதிமுக என்றும் அங்கீகாரம் வழங்கியது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கிய குக்கர் சின்னத்தையே உள்ளாட்சித் […]
காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை வளக்கும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் இசைக்குழுவைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. 10 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமே இசை நிகழ்ச்சிகளை தொடங்குமாறு அதில் […]
வரும் 10-ஆம் தேதி வரை பணிக்கு செல்லும் பெண்கள் இருசக்கரம் வாங்குவதற்கான மானியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி பணிக்கு செல்லும் பெண்களுக்கு முதற்கட்ட இருசக்கர மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருசக்கர வாகன மானியத்துக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் நேற்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது பிறப்பு, இருப்பிடம், சாதி மற்றும் வருமானச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர […]
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்கிற பொருள்படும்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். ஒருவேலை நீட் […]
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசு நலத்திட்ட உதவிகள் என்று தாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் முனியாண்டிபுரத்தில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக உறுப்பினர்கள் அதற்கான அட்டை இருந்தால் தான் கட்சியிலோ, அரசிலோ உதவியை நாட முடியும் என்று தாம் கூறியதை திரித்து பரப்பி விட்டதாக குறை கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை பயன்படுத்த அனுமதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்ததைத்தொடர்ந்து ரெமியா எண்டர்பிரைசிஸ் என்ற தனியார் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஆறு மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. […]
ப.சிதம்பரத்திற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கிக் கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ.200 பெற முடியம் என்று மோடி கூறியதைத் திரித்துக் கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிடுவதா? என தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை இன்று வெளியிட்ட அறிக்கையில், ”20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிய ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் […]
நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறியதில் , காவிரி பிரச்னையில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திண்டுகல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டால் நல்லது எனவும், அதனை கர்நாடக அரசு மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றார். காவிரி நதி நீர் பிரச்னையில் நடிகர்கள் ரஜினி, கமல் தமிழகத்திற்காக குரல் கொடுத்தால் நல்லது என்றும் […]
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழக விருந்தினர் இல்லங்களின் பெயரில் தமிழ்நாடு என்பதை மாற்றினால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், மற்ற மாநில அரசுகள், தங்கள் விருந்தினர் இல்லங்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் பெயரையே வைத்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் மாற்றி இருப்பது மத்திய அரசுக்கு துதி பாடுவதைக் காட்டுவதாகச் சாடினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார். அதே சின்னத்தை தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் தமது அணியினருக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் வீட்டின் அருகில் உள்ள தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் ஒலிமாசால் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூம்புவடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு […]
பூரண மதுவிலக்கை படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்தடும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 5000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம்தேதி அறிவிக்க உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த […]
நாளை பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் பிற்பகல் மற்றும் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே பயணிகள் முன்பதிவு செய்ய முன்பதிவு அமைப்பு இயங்காது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2.05 மணி முதல் 3.45வரை ஒருமணி 40 நிமிடங்களுக்கும், 4ஆம் […]
தமிழகத்தில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை சோதனை செய்து முறையான பேப்பர்கள் இருந்தும் சில நேரங்களில் அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், மேலும் முறையான பேப்பர்கள் இல்லாத நிலையிலும் அப்போதும் லஞ்சம் வாங்குவதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்ட படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது கேமிரா பொருத்தும் திட்டம் சென்னையில் இன்று சோதனை ஓட்டமாக இன்று செயல் படுத்தி பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கேமிராவானது, மெரீனா, கோயம்பேடு, பூக்கடை ஆகிய ஏரியாகளில் உள்ள போக்குவரத்து […]
பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை கொளத்தூர் நகைக்கடை வழக்கில் தொடர்புடைய நாதுராமை போலீசார் மீண்டும் சென்னை அழைத்து வந்தனர். கொள்ளையடித்த நகைகளை பெங்களூரில் விற்றதாக நாதுராம் கூறியதையடுத்து அவனை போலீசார் பெங்களூருக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு ராம்லால் என்ற நபரிடம் 2 கிலோ தங்கத்தைக் கொடுத்ததாக நாதுராம் தெரிவித்தான். இதையடுத்து ராம்லாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாதுராம் தன்னிடம் ஒன்றரைக் கிலோ தங்கத்தை மட்டுமே கொடுத்தததாகவும், அதனை தான் பல்வேறு இடங்களில் விற்றதாகவும் ராம்லால் தெரிவித்ததாகக் […]
ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை, 2 வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அகழாய்வு நடைபெற்ற இடத்தில் மணல் குவாரி நடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அதுபோல மணல் குவாரி எதுவும் செயல்படவில்லை எனவும், உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் முன் தெரிவித்தார். இதனையடுத்து, அகழாய்வு நடைபெற்ற இடத்தை சுற்றி, வேலி […]