மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது” என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உரையாற்றுவதற்காக அமெரிக்கா கிளம்பிய போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கிராமத்தின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகதையாக தொடர்கிறது. பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற […]
வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூபாய் 50 லட்சம் பறித்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியின் தாளாளர் செந்தில் குமாரை கடத்தி 50 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த கலீம், முத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதர்ஷ் பள்ளியின் முன்னாள் ஆசிரியை பிரியாவின் கணவரான, துணை நடிகர் அரி இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் […]
சென்னை போலீசார் கொள்ளையன் நாதுராம் விற்ற நகைகளை மீட்பதற்காக, அவனையும், அவனது கூட்டாளிகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு, பெங்களூர் விரைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் மேல்தளத்தில் துளையிட்டு நகை, பணத்தை நாதுராம் உள்ளிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் கொள்ளையடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த வாரம் நாதுராம், அவனது கூட்டாளிகள் தினேஷ் சௌத்ரி, பக்தாராம் ஆகியோரை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து […]
தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் காவல்துறை பெண் அதிகாரி உள்பட 40-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, புருஷோத்தமன் என்பவர் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை வெள்ளலூர் கனகலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். 57 வயதான இவர் தனது மகள் கீதாஞ்சலியுடன் வசித்து வருகிறார். கோவை காந்திபுரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை புருஷோத்தமன் நடத்தி வந்துள்ளார். காந்திபுரம் பகுதியில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலம், அவர் இரண்டாவது திருமணத்துக்காக பதிவு […]
நடிகர் கமல்ஹாசன் கிராமப் புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து அகில இந்திய பார்கவுன்சிலிடம் கருத்துக் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. பார்கவுன்சில் தேர்தலில் முறைகேட்டைத் தடுக்கக் கோரி பாஸ்கர் மதுரம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், தேர்தலில் வாக்குக்கு 30 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சுற்றுலா, இருசக்கர […]
மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நபரை கைது செய்தனர். சென்னை எழும்பூரை சேர்ந்த குமார் என்பவர், தமது மகனுக்கு மருத்துவச்சீட்டு வாங்குவதற்காக, ராஜேஸ்வரன் என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடந்த 2013 ஆம் ஆண்டு கொடுத்தார். பூனேவில் உள்ள மருத்தவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறிய ராஜேஸ்வரன், பின்னர் தலைமறைவானார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தர்மபுரியில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகனும் தமிழக அரசியலில் குதிக்க போவது உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது இருவரும் தனது அரசியல் பணிகளை தனது ரசிகர்களின் மூலம் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது சுற்று பயணத்தை பிப்ரவரி 22ஆம் தேதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களது இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். ஆனால் எபோதும் அரசியல் தலைவர்கள் நடத்தும் பொதுகூட்டம் போல் இல்லாமல் மக்களிடம் கலந்துரையாடல் போல் இருக்கும் என கமலின் ரசிகர் […]
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ஆம் தேதி முதல் தாம் நடத்த இருக்கும் கூட்டங்கள் ஒருவழிப்பாதையாக தாம் மட்டும் பேசுவதாக இருக்காது என்றும், பெரியார் பாணியில் கலந்துரையாடல்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பிரபல வார இதழில் தாம் எழுதி வரும் தொடரில் இதனைத் தெரியப்படுத்தியுள்ள அவர், சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.தாம் இந்து விரோதியல்ல என்றும் […]
ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் சென்னை மின்சார ரெயிலில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்று ரகளையில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பட்டாக்கத்திகளை உரசிக்கொண்டு சென்ற 9 மாணவர்கள் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வருங்காலத்தில் பாஸ்போர்ட், மற்றும் காவல்துறையின் நன்னடத்தை சான்று வழங்கப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கெத்து காட்டுவதாக நினைத்து பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் […]
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவடி உட்பட நாட்டின் 5 ராணுவ சீருடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று கூறியுள்ளார். சீருடைகளுக்கு பதில் சீருடைப்படி வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அடுத்து இந்த தொழிற்சாலைகள் ஏப்ரலுடன் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆவடியில் 2 ஆயிரத்து 321 பேர் உட்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ராணுவ சீருடைகளின் சிறப்பே மிடுக்கு என்று தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரி சீருடையில் பயிற்சி மற்றும் […]
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த ஊர் இளைஞருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 45 வயது ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள ஒரு தக்காளி மண்டியில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன், அந்த அரசு பள்ளி ஆசிரியை நெருக்கமாக உள்ள வீடியோ படம் ஒன்று சமீபத்தில் யூடியூப்பில் […]
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் 1,10,000 பேருக்கு 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் உள்ளிட்டவை கோரி, தொமுச, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 8 நாட்கள் வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டன. இதனால், அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கியனர். அப்போது, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு அந்த […]
குட்கா ஊழல் வழக்கில் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் […]
பாஜக மற்றும் அதிமுக இடையே இணக்கமான சூழல் நிலவி வருவதாக எதிர்கட்சியினர் கூறிவரும் நிலையில் தற்போது அதற்கு மாறாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். தேசிய கட்சிகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளி விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் எந்த நிலையிலும் தேசிய கட்சிகள் […]
மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் பகிரங்க கருத்து. தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை […]
ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெங்களூரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சசிகலாவைச் சந்திக்கும் நேரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தியாளர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் உள்ளே இருப்பதாக கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட அறிக்கையில் உள்ள நேரத்திற்கும், உண்மையில் […]
சசிகலா மீது ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா தரப்பினர் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, சசிகலா சார்பில், விசாரணை ஆணையத்தில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது புகார் அளித்தவர்களிடம் தங்கள் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பெயர் பட்டியலை தர வேண்டும் என்றும் […]