பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் சிறு சிறு பைசாவாக ஏறிகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாட்டுவண்டியில் சென்று போராடினர். தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராணுவத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,200 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் சுமார் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. source : www.dinasuvadu.com
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தான் ஒரு தொண்டனாக செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது அவர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து களத்தில் இறங்கியுள்ளார். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் 500-க்கும் அதிகமான திமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டு அருகே இருந்த திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சோழவந்தான் பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், அப்பகுதியில் தங்கி இருந்தார். […]
இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகத்தான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா […]
பிடிவாரன்ட் பிறப்பிக்க நேரிடம் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…. மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு எதிரான வழக்கில் அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து, நித்யானந்தா முறையாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தவறான […]
சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர அதிமுக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிராக ”சொடக்கு” பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக நிர்வாகி சதீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா நடித்த ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் இடம் […]
தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 1320 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் உடன்குடி மின் திட்டத்துக்கு அடிக்கல் முதலமைச்சர் பழனிசாமி நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியை […]
பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை சாலை மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. அனைத்து கட்சி கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு பற்றி விவாதிக்கபட்டது. நாளை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளதென அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் […]
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் பேசும்போது தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப்பண் என்று அவர் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. https://twitter.com/News18TamilNadu/status/957489169344864256 திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் நாட்டுப்பண் என்று உச்சரித்ததை தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது… […]
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் […]
பேருந்து கட்டண உயர்வு மறுபரீசிலனை செய்யப்படும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைப்பு செய்துள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இல் இருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் வியாபாரம் செய்யும் தமிழக அரசை திருடன் என்றும், “மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை” என்றும் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து […]
தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்து பல அரசியல் பிரபலங்கள் பேசிவரும் வேளையில்,தற்போது ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் பேசியதாவது ‘காஞ்சி மடத்தில் கடவுளை வாழ்த்தி பாடும்போது கூட சுவாமிகள் எழுந்து நிற்பதில்லை’ என்று மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, ஏற்கனவே காயப்பட்டுள்ள தமிழர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி.தினகரன் . https://twitter.com/TTVDhinakaran/status/957191116868079618 […]
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையளிக்கக் கூடியது. இங்கு தரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை நிர்ணயித்த இலக்குகளை, வெகு சீக்கிரமே அடைந்துவிட்டோம். உடலுறுப்பு தானத்திற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கி, எளிதில் பதிவு செய்து கொள்ளும் முறையை கொண்டு […]
அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் […]
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி […]
வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது.தாதர் விரைவு ரயிலில் ஏற முயன்றபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை மீட்டதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று செய்துயாளர்களை சந்தித்த இவரிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ‘ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன்தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் விஜயேந்திரர் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது, சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் […]