தமிழக அரசு கொண்டு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]
கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார் . அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை வெளியிட உள்ளதாக அறிவித்தார். இதை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், தமிழகம் முழுவதும் உள்ள தனது நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவர், பிப்ரவரி 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மக்களைச் சந்திக்க […]
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் மாணவர்கள் பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் . மதுரை மெஜிரா கல்லூரியில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நேற்றைய தினம் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக சிபிஐ(எம்) […]
2017ம் ஆண்டில் சென்னை நகரில் நடத்தப்பட்ட தேடல்களின் போது 22,575 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 748 கிலோ கஞ்சா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கஞ்சா,குத்கா மற்றும் பல தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதனால், அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ், சென்னை காவல்துறை சிறப்பு குழுக்களை அமைத்தது. ஜனவரி- 1, 2017 முதல் டிசம்பர்-31, 2017 வரை நடத்தப்பட்ட தேடலில் மொத்தம் 3039 வழக்குகளும் 3281 நபர்களை கைதும் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த குற்றங்களுக்கு தொடர்பு உள்ள நபர்களும் குண்டர்கள் சட்டத்தின் […]
உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கிளை சார்பாக பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.. திண்டுக்கல் RMTC நகர் பகுதியில் சேக்ரட் ஹார்ட் கல்லூரி […]
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 பழங்கால சிலைகளை கடத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 1992ல் இருந்து 2017 வரை இந்த கடத்தல் நடந்துள்ளதாக தெரிகின்றது. மேலும் இதில் 350 சிலைகளின் தகவல்கள் தெரியவில்லை என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 18 சிலைகளை கண்டுபிடித்ததாகவும் 50 சிலைகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/gvprakash/status/955640929091661824 விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் — G.V.Prakash Kumar (@gvprakash) January 23, 2018
இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொதுமக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பேசிய கனிமொழி, திருப்பதி ஏழுமலையானுக்கே சக்தி இருக்கும்போது அவரது உண்டியலுக்கு எதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என […]
ஆண்டல் சர்ச்சை தொடர்பாக அவரது வார்த்தைகள் திசை திருப்பிவிட்டதாக கவிஞர் வைராமுத்து கூறிய போதும், கடந்த இரண்டு நாட்களில் இதனால் அதிக முறைகேடு நடந்துள்ளது. நித்யானந்தா ஆசிரமத்தில் பயிலும் சிறுவர்கள் இந்த சர்ச்சை பற்றி அவதூறாக பேசி விடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது பொது மக்களிடையே கோபத்தை தோற்றுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகா போலீஸுக்கு புகார் அளித்த பிரபல தொழிலதிபரும்,சமூக ஆர்வலருமான பியுஷ் மனூஷ், ‘பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். முக்கிய எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் பலர் ஆசிரமத்தின் […]
தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய 40 பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய 20 பேருந்து உட்பட 2,000 பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதாக கூறினார். […]
அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணிக்க மக்கள் தொடங்கியுள்ளனர். பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளைவிட ரயில்களில் பயணம் செய்தால் பணம் மிச்சமாகும் எனக் கருதி, முடிந்தவரை ரயில்பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.இதேபோன்று, சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பேருந்துக் கட்டணங்களை ஒப்பிடுகையில், […]
ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது என, பாலிவுட் இயக்குநர் நானா படேகர் தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி மற்றும் சின்னத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காலா படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தமது கருத்தை கூறியுள்ளார். இந்திய அரசியலை கடுமையாக விமர்சித்துள்ள அவர், நல்லவர்கள் அரசியலில இறங்க முடியாது எனவும் கூறியுள்ளார். ரஜினி மிக எளிமையான மனிதர் என்றும், அவருக்கு […]
தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளின் தகுதி மற்றும் முழு விவரம் இதில் உள்ளது. கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சி.சி. எந்திரத் திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் 25,000 ரூபாய் தொகை பயனாளிக்கு மானியமாக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய […]
இன்று காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் […]
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன், பிப்ரவரி 1 முதல் மார்ச் 22 வரை மாவட்ட வாரியாக ஸ்டாலின் 50 நாட்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ” கட்சி பணிகளை செம்மைப்படுத்த அண்ணா அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும், “உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1 […]
ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், பிப்ரவரி 24ம் தேதி மாநாடு நடத்தப்படாது என தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமது அரசியல் பயணத்தில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், […]
அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் […]