பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது!

தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

தேனிமாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்துத் தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெரியகுளத்தில் இருந்து அகமலை செல்லும் சாலையில் கண்ணக்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் நியூட்ரினோ திட்டம் பற்றிய செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம், நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.

ஆய்வுக்குப் பின் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், யானைகள் காடுகளில் இருந்து ஊர்ப்புறங்களுக்கு வராமல் இருப்பதற்கு அகழிகள் வெட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.