டி.டி.வி.தினகரனிடம் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்-அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் அணியில் அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இணைந்தார். இது குறித்து தனக்கு எதுவும்

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் அணியில் அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இணைந்தார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம். தினகரன் தரப்பில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்.எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் தான் செயல்படுகிறது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பேசி தீர்க்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்