பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, பா.ஜ.க.வினர் சிலை உடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய இருமாநில கட்சியினரிடமும் பேசியிருப்பதாகவும், பா.ஜ.க.வில் உள்ள எவரும் எந்தச் சிலை உடைப்புச் சம்பவங்களிலாவது ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிலைகள் உடைப்பு என்கிற செயலுக்கு பா.ஜ.க எப்போதுமே எதிரானது என்றும் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று பெரியார் சிலை […]
பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை என ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சிலைகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.எனது அட்மின் செய்த தவறுக்காக நான் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி நிகழ்ச்சிக்காக விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அட்மின் பதிவிட்டுள்ளார்.பதிவையும், அட்மினையும் நீக்கிவிட்டேன். பிறர் செய்வதைக் காரணம் காட்டி நானும் அதையே செய்ய விரும்பவில்லை.யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல; வருந்துகிறேன்.வன்முறை இருதரப்பிலும் நடப்பது ஏற்கத்தக்கதல்ல ; அமைதி காக்க […]
மைலாப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பூணூல் அறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் (பேஸ் புக், வாட்ஸ்அப் ) தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார். மேலும், இதற்கு விளக்கமளித்து அவர் கூறுகையில், நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும், ராஜாவாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சிலை உடைப்பு போன்ற செயல்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் சத்யராஜ் பெரியார் சிலையை உடைப்போம் என்ற ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். பதவி, ராணுவம், சக்தியால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்று கூறிய அவர், நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம் என வீடியோ பதிவை வெளியிட்டார். இதற்க்கு முன் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் […]
நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் பதிவை அட்மின் (Admin) என் அனுமதி இன்றி பதிவுசெய்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் […]
கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் சர்ச்சை கருத்தால் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 மணியளவில் மர்மநபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அது இரண்டுமே அலுவலகத்தை எந்த சேதமும் செய்யவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியது யார் என […]
பாரதிய ஜனதா கட்சியினரால் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது பதிவை நீக்கினார். இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனைக் கண்ட […]
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் லெனின் இந்தியாவுடன் தொடர்பற்றவர் என்பதை விட அறியாமை வேறு என்ன இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். சுப.வீரபாண்டியன் சென்னை விமான நிலையத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை உடைப்போம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தது குறித்து பேட்டியளித்தார். “லெனின் மாபெரும் சிந்தனையாளர். உலகத்தலைவர்களுள் ஒருவர். லெனின் இந்தியாவுடன் தொடர்பற்றவர் என்பதை விட அறியாமை வேறு என்ன இருக்க முடியும்? தொலைபேசியை கண்டுபிடித்தவருடன் இந்தியாவுக்கு என்ன […]
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்த பெரியார் சிலையை பாஜகவை சேர்ந்த முத்துராமன் பிரான்சிஸ் ஆகியோர் சிலை சேதப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இந்த கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலைதான் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கூறியதுபோல் பெரியார் சிலை பாஜகவின் […]
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன், பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரியாமலும், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவே எச்.ராஜா அப்படி பேசியிருப்பதாகவும் டி.டி.வி.தினரகரன் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தமிழக மீனவர்களை, தாக்கி வலைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.நேற்று 420க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து , கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 50 படகுகளில் இருந்த 150க்கும் மேற்பட்ட மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியும் இன்னும் அரசு பேருந்துகளின் தரம் மோசமாகவே உள்ளது. அதற்கான பராமரிப்புகள் மிகவும் மோசமாக தான் உள்ளது. தர்மபுரி அரசு பேருந்து 6A வானது, பந்தரஹால்லியிளிருந்து, பாப்பாரபட்டி செல்லும் போது, திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்
கமல்ஹாசன் மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார். பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரும், தனியார் செய்ய வேண்டிய வேலையை அரசும் செய்வதாக விமர்சித்தார். மது இல்லாமல் இருக்க முடியும் என்றாலும், அது இல்லாமல் மக்களால் இருக்க முடியாது […]
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள நிலையில் சமூகத்தில் வரும் ஏற்படும் நிலைகளை அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக பிசியாக இருக்கிறார். இவர் கதிராமங்கலம்,ஜல்லிக்கட்டு ,ஒகி புயல் என பல புரட்சிகளில் அவரின் குரல் ஒலித்தது. அதே நேரத்தில் டாக்டர் அனிதாவின் விசயத்தில் குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது இன்று அனிதாவின் 18வது பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டரில் டாக்டர் அனிதாவிற்கு பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று […]
ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காவல் அதிகாரிகளும்,ஆட்சியரும் தான் பொறுப்பு. இரு துருவங்கள் போல் இல்லாமல், நீங்கள் இருவரும் இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆட்சியர் காவலர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “சட்டம் ஒழுங்கை திறமையாகப் பராமரித்தல், பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வெளிப்படையாகவும், திறமையாகவும், விரைவாகவும் அளித்தல், […]
தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் இன்று தொடக்கம் அந்தியோதயா சிறப்பு ரயில், தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சேவையை இன்று முதல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு, கடந்த நவம்பர் மாதம் வெளியான ரயில்வே கால அட்டவணையில் சென்னைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இவ்விரு அந்தியோதயா ரயில்களும் முழுக்க முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. நெல்லை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் […]
பல்வேறு நகரங்களில் தமிழகத்தில் வெயில் அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மதுரை மற்றும் சேலத்தில் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. பருவமழையும் சரிவர பெய்யவில்லை. குடிநீர் ஆதாரங்களுக்கான அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. பல்வேறு நகரங்களிலும் தமிழகம் முழுவதும் வெயில் […]
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நிலையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக இருப்பதாகவும் செல்லும் நாடுகளில் எல்லாம் மகளிர் உரிமை குறித்துப் பேசுவதாகவும், தெரிவித்த அவர், ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றத் தயாராக […]
ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இடையே திண்டுக்கல்லில், ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மலேசியாவில் பணிபுரிந்து வரும் கார்த்திக், சொந்தஊரான திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்துக்கு வந்தபோது, தனது ஃபேஸ்புக் நண்பரான, திண்டுக்கல்லைச் சேர்ந்த தளபதி என்பவருக்கு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதனால், இருவருக்கும் பேஸ்புக் பக்கத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் வீட்டிற்கு சென்ற தளபதி அவரை அழைத்துச் சென்று ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு […]