தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நிலையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக இருப்பதாகவும் செல்லும் நாடுகளில் எல்லாம் மகளிர் உரிமை குறித்துப் பேசுவதாகவும், தெரிவித்த அவர், ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.