திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் ராஜா- உஷா தம்பதியரின் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் கணவன் மனைவி இருவரும் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் […]
போலீஸ் விசாரணையில், சென்னையில் குத்திக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி கொலை வழக்கில் கொலையாளி அழகேசனால் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும், வீட்டுக்கே சென்று கட்டாயத் தாலி கட்ட முயன்றதும் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வந்த மாணவி அஸ்வினி தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர். இந்தக் கொலையை செய்த இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கொலை நடந்தது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் […]
உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரி வாசலில் இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை குத்திக்கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் மாணவியை […]
மாணவர் ஒருவரின் விரல்கள் மேலூர் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் துண்டாகின. மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஆர்ஜூன் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், இதே பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர் அர்ஜூனிடம், கார்த்திக் ராஜாவும், அவரது நண்பர் சரவணன் என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தகராறு முற்றவே, மறைத்து வைத்திருந்த […]
அந்தோணிசாமி என்ற பள்ளி ஆசிரியர் நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய கைது செய்யப்பட்டுள்ளார். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அப்பாவி மாணவிகளை […]
மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரி வாசலில் இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை குத்திக்கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம் […]
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாரதிய ஜனதா கட்சியினர், ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா […]
ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் தேதி விவேக் ஜெயராமன் ஆஜரானார். அன்றைய தினம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிறுவயதில் இருந்து போயஸ் கார்டனில் வளர்ந்தவர் என்பதால், ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உட்பட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மீண்டும் ஆஜராகுமாறு விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10.15 […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை, 500 ரூபாய் விலைக்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தொடர்பாக , ஜி.எஸ்.டி, கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற […]
சிறையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதனை தொடர்ந்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் […]
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு […]
விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று திருச்செந்தூர் வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மகளிர் மேம்பாட்டில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவதற்கு, விரைவில் இலங்கை செல்ல உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போலீசார் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில் சாதகமாக நடந்துகொள்வதாக கணவர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் பெற அழைத்த போலீசார் வாக்குமூலம் பெறவில்லை என்றும் போலீசார் காமராஜுக்கு சாதகமாக நடந்துகொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் எஸ்.ஐ(SI) பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியார் குறித்த ஹெச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில்,போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது உயிர்ப்பலி ஏற்படுத்தும் விதத்தில் விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவு 304-லும் உயிர்பலி ஏற்படும் என்று தெரிந்தே ஒரு செயலில் ஈடுபடுதல் என்ற பிரிவு 336-லும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உடற்கூறு […]
அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்க்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல்.அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெயிண்ட் வீசியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திரிபுராவில் மாமேதை லெனின் சிலை,தமிழகத்தில் பெரியார் சிலை,உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் இருசக்கரவாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மனித நேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது […]