லெனின்,பெரியார் சிலையை தொடர்ந்து தமிழகத்தில் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல்...!!

Chennai: Paintings on Ambedkar statue in Thiruvottiyur village street Thiruvottiyur police investigate about unidentified persons

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல்.அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெயிண்ட் வீசியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திரிபுராவில் மாமேதை லெனின் சிலை,தமிழகத்தில் பெரியார் சிலை,உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது.