தமிழ்நாடு

Tamil News Live Today: இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும் – டாக்.ராமதாஸ்

இந்தியைத் திணிக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்.ராமதாஸ் வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். இது அப்பட்டமான இந்தி திணிப்பு ஆகும் என தெரிவித்துள்ளார்.

1 Min Read
ramadoss

சென்னையில் பரபரப்பு.! அதிகாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து.!

சென்னை சவுகார்பேட்டை வணிக வளாகத்தில் அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை சவுகார்ப்ட்டையில் முக்கிய வீதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராயபுரம், எழும்பூர், அசோக் நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த […]

2 Min Read
Fire accident

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்.!

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள். தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ல் நிறைவுபெற்ற +2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து, மாணவர்கள் […]

4 Min Read
students

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட ஆசனூர், தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பணி, 6 நாட்கள் நடக்க உள்ளது. ஏற்கனவே, கடந்த மே மாதம் 17ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Sathyamangalam ProjectTiger

இன்று சந்தனக்கூடு திருவிழா.! இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை.!

ராமநாதபுரம், ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி (நாளை) அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். இதற்காக மே 31ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருடா வருடம் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்துக்கு […]

3 Min Read
Ramanathapuram

மூழ்கும் கப்பல் பாஜக.. ஒரு சீட் கூட கிடைக்காது.! திமுக எம்பி டி.ஆர்.பாலு பதிலடி.!

மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜக தமிழகத்தில் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.  நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். காலையில் சென்னை கேளம்பாக்கத்தில் கட்சி நிர்வாகிகளுடன் 2024 தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு, வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக – காங்கிரஸ் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் வரும் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களை […]

4 Min Read
DMK MP TR Baalu

மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 12வது முறையாகும். இதன் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் […]

3 Min Read
Mettur dam

இன்றைய (12.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

387-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் […]

3 Min Read
Petrol

பாஜக தமிழகத்துக்கு என்ன செய்தது… முதல்வரின் கேள்விக்கு அமித்ஷா பதில்.!

பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வேலூரில்நடைபெற்ற  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று […]

4 Min Read
Amitshah-stalin

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார்… அமித்ஷா பேச்சு.!

புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளோம் வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு. பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக கூறினார். தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி நம் பாரதத்தின் பழமையான மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறார். உலகில் எங்கு […]

3 Min Read
Amithshah Vellore

அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அமித்ஷா வின் பேச்சுக்கு செம்மலை பதில்.!

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அமித்ஷா வின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதில். மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா, கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளை வெல்ல […]

3 Min Read
amitshah semmalai

தமிழர்கள் 2 முறை பிரதமராகும் வாய்ப்பை இழந்ததற்கு திமுகதான் காரணம்.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இழந்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளர்.  மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா தமிழாகத்தில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், 2 முறை […]

3 Min Read
Amit shah

அறிஞர் அண்ணா தோட்டத்தில் பூத்த மலர் தான் கலைஞர்.! சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!

சேலத்தில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வைத்தார். சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் சுமார் 170 கோடி மதிப்பீட்டில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், 1,367 கோடி ரூபாயில் ஏற்கனவே முடிவுற்ற அரசு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 235 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளையும் […]

3 Min Read
MK Stalin

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்.!

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடம் புரண்ட கடைசி 2 பெட்டிகள் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டன. மேலும், தடம் புரண்ட ரயில்பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. இதனால், சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இதே இடத்தில் சதாப்தி […]

2 Min Read
trainderailment BasinBridge

தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை.!

தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.  தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தார். நேற்று இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, இன்றுசென்னை கேளம்பாக்கத்தில் தென் சென்னை பகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை பகுதியில் பாஜக நேரடியாக களமிறங்க […]

2 Min Read
Amit shah

கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம், வ.உ.சி. மார்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். #Live: சேலம் அண்ணா பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தல்https://t.co/BzwUdpjc6Q — M.K.Stalin (@mkstalin) June […]

3 Min Read
MKStalin

சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 4 பேர் பரிதாபமாக பலி.!

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

2 Min Read
accident

Tamil News Live Today: தோனி இருக்கும் போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருந்தால் அதிலும் கோப்பை வென்றிருப்பார்… பாண்டிங்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெரும் முன் அறிமுகமாகியிருந்தால், அதிலும் இந்தியாவிற்கு தோனி கோப்பையை வென்று கொடுத்திருப்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெற்றிபெறும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.

1 Min Read
Ponting -Dhoni TEst MAce

பாஜகவுக்கு பல்லாக்கு தூக்கி ஆட்சியை காப்பாற்றி கொண்டவர் இபிஎஸ்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சேலத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக பற்றியும், பாஜக பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  நேற்று சேலத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிமுக குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தோல்வியை மட்டுமே அதிமுக கட்சி […]

3 Min Read
MK Stalin

நாளை பள்ளிகள் திறப்பு…அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு.!

தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளிவளாகத்திலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி திறப்பையொட்டி, விடுமுறைக்கு சோந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக, இன்று சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து […]

2 Min Read
school reopen