அமித்ஷா வருகை…! இந்த மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை..!
வேலூர், பள்ளிக்கொண்டா கந்தநேரி பகுதிகளில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், நேற்று இரவு தமிழகம் வந்தடைந்தார். இந்த நிலையில், இன்று வேலூர், பள்ளிக்கொண்டா கந்தநேரி பகுதியில்எ நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேலூர், பள்ளிக்கொண்டா கந்தநேரி பகுதிகளில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.