இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி

Su Venkatesan MP tweeted that Tamil Nadu Chief Minister should issue an order that the widow certificate should be issued within a week.

su.venkadesanmp

விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென தமிழக முதல்வர்  உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்களிடம் விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை என்று கலங்கிய கண்களுடன் வந்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார். “விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை” என்று. அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம். விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென தமிழக முதல்வர்உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node