அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் கொண்டுவரப்படும் – விஜயபாஸ்கர்

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது.
புதுக்கோட்டையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்போதைய திமுக ஆட்சியின் மெத்தன போக்கால் 2 ஆண்டு காலம் அந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில முடியாமல் 150 மருத்துவ இடங்கள் வீணாகிவிட்டது; இப்போது மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்கியது வரவேற்கத்தக்கது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம். மூடப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளை தான் நகர்ப்புற நலவாழ்வு மையங்களாக திறக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.