பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது […]
கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. கோவையில், ஈரோடு, திருப்பூர், கோவை தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக […]
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல். பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மயிலாடும்பாறை, கொடுமனல், கீழடி மற்றும் பொறுமைபொருநை அகல் ஆய்வு குறித்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சியையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. […]
தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பங்குகள், பங்குதாரர்கள் என்று அனைவரும் SC/ST வகுப்பினராக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, […]
ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, […]
இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல்,சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு,கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிப்பாட்டு […]
தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி,சென்னையில் இன்று 43-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் ரூ.105.41-க்கும்,டீசல் லிட்டருக்கு ரூ.96.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.120.51,டீசல் லிட்டருக்கு ரூ.104.77-க்கு விற்பனை. […]
கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தின.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.ஆனால்,இதற்கான மானியம் ரூ.25 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான […]
வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,திருப்பத்தூர்,நாமக்கல்,வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் […]
திருநெல்வேலியின்,தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14 ஆம் தேதியன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கிய நிலையில்,இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை,தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,நெல்லை […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 […]
ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இதனிடையே,கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து,ஒரு கிராம் […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி அண்மையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக உணவகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வேளையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால்,தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை […]