திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை எடுத்து வைத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் குற்றசாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். உச்ச நீதிமன்றம் மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற […]
சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தனது விடுதலைக்காக உழைத்த தலைவர்களை […]
ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி. சென்னையில் கைது செய்யப்பட்டன காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக […]
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என தகவல். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். […]
இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவ சேவை மையம் சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் மூத்தோருக்கான மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில்,கடந்த ஆட்சியாளர்கள் அதனை தொடங்கி வைக்க சுணக்கம் காட்டினார்கள்.இதனையடுத்து,கொரோனா பேரிடர் காலத்தில் அம்மருத்துவமனை தற்காலிக கொரோனா மையமாக செயல்பட்டது. ஆனால்,கடந்த […]
ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். நம்முடைய மன உணர்வை […]
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கன்னியாக்குமரி,தென்காசி,நீலகிரி,திருப்பூர்,கோவை,சேலம்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சதீவு,மாலத்தீவு,கர்நாடகா கேரளா கடலோர பகுதிகள்,தெற்கு வங்கக்கடல்,அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல்பகுதி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் […]
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு எவ்வித தடைகளுமின்றி மே 5ந் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6ந் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் கடந்த 10ந் தேதி பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில்,வேங்கைக்கால் பகுதியில் அமைக்க கருணாநிதி விலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே […]
திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், அஇஅதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்காக அதிகரித்தது எனும்போது, திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது […]
கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல். சர்வதேசத் தரத்தில் ரூ.114 கோடி செலவில் மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி […]
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்து ட்வீட். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து. சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாமதமெனினும் வரவேற்கிறோம் ! மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் […]
இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகித உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது த்விட்டேர் கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி […]
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது […]
கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. கோவையில், ஈரோடு, திருப்பூர், கோவை தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக […]
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல். பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மயிலாடும்பாறை, கொடுமனல், கீழடி மற்றும் பொறுமைபொருநை அகல் ஆய்வு குறித்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சியையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. […]
தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பங்குகள், பங்குதாரர்கள் என்று அனைவரும் SC/ST வகுப்பினராக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, […]