உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஷரீனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார் […]
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் […]
புதுக்கோட்டையை சேர்ந்த மயமான 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். புதுக்கோட்டை மாவட்டம், மணமேற்குடி அருகே பொன்னகர் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கரை திரும்ப வேண்டிய நிலையில், அவர் கரை காரணத்தால் அவரை கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் சகா மீனவர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாயமான 4 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படகில் பழுது ஏற்பட்டதால், படகு கவிழ்ந்து […]
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரம்பத்தில் வி.ஐ.பி தரிசனம் மட்டுமே கனகசபை […]
கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடி முடக்கம்: இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச […]
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும்,பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் TNPSC அறிவித்திருந்தது. இந்த நிலையில்,தமிழகம் […]
விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையாகிறது. அதன்படி,சென்னையில் இன்று 44-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதி தரும் வகையில்,மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியாக […]
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதைப்போல,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில […]
அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர் குறித்து அக்கட்சி தலைமை ஆலோசனை. தமிழ்நாடு உட்பட நாட்டில் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, […]
வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது […]
வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு முதல்வர் வாழ்த்து. திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்! ‘நானும் நீதிபதி ஆனேன்’ […]
திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை எடுத்து வைத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் குற்றசாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். உச்ச நீதிமன்றம் மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற […]
சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தனது விடுதலைக்காக உழைத்த தலைவர்களை […]
ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி. சென்னையில் கைது செய்யப்பட்டன காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக […]
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என தகவல். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். […]
இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவ சேவை மையம் சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் மூத்தோருக்கான மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில்,கடந்த ஆட்சியாளர்கள் அதனை தொடங்கி வைக்க சுணக்கம் காட்டினார்கள்.இதனையடுத்து,கொரோனா பேரிடர் காலத்தில் அம்மருத்துவமனை தற்காலிக கொரோனா மையமாக செயல்பட்டது. ஆனால்,கடந்த […]
ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். நம்முடைய மன உணர்வை […]
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கன்னியாக்குமரி,தென்காசி,நீலகிரி,திருப்பூர்,கோவை,சேலம்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சதீவு,மாலத்தீவு,கர்நாடகா கேரளா கடலோர பகுதிகள்,தெற்கு வங்கக்கடல்,அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல்பகுதி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் […]