சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையாகிறது. அதன்படி,சென்னையில் இன்று 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆடைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வருகின்ற 27-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் […]
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு எந்தவித பயன்படும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,368 கோடி வருவாய். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி நிதி மக்களின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனங்களுக்கு (Insurance companies) வருவாயாக அதாவது லாபமாக சென்றுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. கடந்த 2009 – 2021 வரை காப்பீட்டு திட்ட பிரீமியமாக ரூ.10,706 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தியிருப்பது தகவல் அறியும் உரிமை […]
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை […]
காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை […]
மூத்தக்குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும் என டிடிவி தினகரன் ட்வீட். மூத்தக்குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என டிடிவி தினகரன் அவர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூத்தக்குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இந்த கட்டணச்சலுகை, இயல்பு நிலை திரும்பி மீண்டும் […]
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபிஷேக் என்பவரது மனைவி ராசி. அபிஷேக் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ராசி 2020 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டம் பெற்ற நிலையில், மேற்கொண்டு பிஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதி உள்ள தனது […]
தமிழகம்,புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்டன் காணப்படும் என்றும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,லட்சத்தீவு,கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ […]
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்த நிலையில்,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆலைகளை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடியது. இந்நிலையில்,ஜூன் 30 ஆம் தேதியுடன் மறைமலை நகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை […]
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலையை மூட முன்னதாக தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து,தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில்,ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த […]
தமிழகத்தில் முன்னதாக அதிமுக அட்சியில் அமைச்சராக இருந்தபோது சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதற்கட்ட அறிக்கை: இதனையடுத்து,தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு […]
பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை (ஆசிரியர்கள்) சஸ்பெண்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிட் பேப்பர்கள் சிக்கிய தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமித்து […]
இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், வருகிற 24-ந்தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்த கண்காட்சி நடக்கிறது. இந்த 124-வது மலர் கண்காட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் அலங்கரிக்கப்பட்ட மலர்களை பார்வையிட்டார்.
தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்பட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார். இந்த ரயில் பாட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதன் பின் பேசிய அமைச்சர், ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள […]
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஷரீனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார் […]
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் […]
புதுக்கோட்டையை சேர்ந்த மயமான 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். புதுக்கோட்டை மாவட்டம், மணமேற்குடி அருகே பொன்னகர் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கரை திரும்ப வேண்டிய நிலையில், அவர் கரை காரணத்தால் அவரை கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் சகா மீனவர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாயமான 4 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படகில் பழுது ஏற்பட்டதால், படகு கவிழ்ந்து […]