அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழ்நாட்டில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி (State Council of Educational Research and Training) உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆங்கில புலமையை திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், […]
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என TNPSC தலைவர் தகவல். தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் […]
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்து வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து. செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். பிரக்ஞானந்தா ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி இருந்தது […]
இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக புகார். தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதினர். Group 2 / 2A தேர்வுக்கு இந்த முறை ஆண்களை விட பெண்கள் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை […]
திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு […]
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா […]
ராஜீவ் காந்தி ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் என சீமான் பேட்டி. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி இன்று 6வது நாளாக தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் […]
தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை […]
நெல் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் […]
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை […]
முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் தொகையில் முதல்வர் பேச்சு. உதகையின் 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ளார். இந்த விழாவில், ரூ.34 கோடி ரூபாய் மதிப்பில் 20 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ரூ.28 கோடி மதிப்பீட்டில் 9,422 பயனாளிகளுக்கு நல திட்ட வழங்கினார். அதன்பின் இந்த நிகழ்வில் பேசிய அவர், முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் […]
கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி. ஸ்ரீபெருபூதூரில் ராஜீவகாந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு ஒருசில துரோக கும்பல் எப்படி மகாத்மா காந்தியை வீழ்த்தினால் தான், தங்களுடையை சிந்தனைகளை, சித்தாந்தத்தை நிலைநிறுத்தலாம் என கருதி கொன்றார்களோ, அதே போல தான் ராஜீவ் காந்தியை கொன்றால் தான் தங்களால் வெற்றி பெற முடியும் என கருதினர். ஆனால், […]
லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு. காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்நிலை மரணத்தை தடுப்பது குறித்து மத்திய மண்டல போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். காவல்நிலைய மரணங்கள் கூடாது, போலீஸ் வன்முறையை கையாள கூடாது என முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தேவைப்படும் போது பலத்தை போலீஸ் பயன்படுத்தலாம், குற்றவாளிகள் போலீசை […]
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன் மற்றும் அவரது தயார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டியில், முன்னாள் முதல்வர் ராஜீவ் 31-காந்தியின் வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் […]
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் […]
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை […]
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.