#BREAKING: அதிர்ச்சி.. தமிழகத்தில் புதிய வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார்.
சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்றும் மற்ற மாநிலங்களில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் எனவும் கூறியுள்ளார். ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா வகை தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.