மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டிணப்பிரவேச விழாவில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஒருபக்கம் வரவேற்பு அளித்த நிலையில், மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அந்தவகையில், தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் […]
பஞ்சாப் பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்: நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள்.பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என […]
பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் முத்தமிழ் பொழிப்பெயர்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடல் திட்டத்தில் நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற […]
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை. அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத்தொடங்கியது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 […]
மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில்,கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது.குறிப்பாக,தற்போதய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மதுரை எய்ம்ஸ் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறதுஅதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. இதனிடையே,தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும்,தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும்.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் […]
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள். மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும்,நாளையும் இந்த மாவட்டங்களில் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில்,சென்னையில் இன்று 29-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது.அதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. அதன்படி,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8,37,317 பேர் எழுதுகின்றனர்.மேலும்,தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில்,இன்று […]
கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதியின் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என ட்வீட். நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி, இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டமன்ற […]
உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, விழுப்புரம், தேனீ, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது மன்னார்குடி ஜீயர் பேட்டி. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை […]
தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என மதுரை ஆதீனம் பேட்டி. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர […]
எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தல். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பான விகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும் குடியரசு தலைவர் முடிவுக்காக காத்திருக்க […]
கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என அறிவிப்பு. தகவல் தொழில்நுட்பவியல்துறை மானிய மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல்துறை “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும் என அறிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகளை வழங்கப்படும் எனவும் […]
பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், […]
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அன்னை தமிழில் அர்ச்சனை அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை தரப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை […]