தஞ்சை:ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனையடுத்து,கேரளாவில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் […]
வங்கக்கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே,இன்று கன்னியாக்குமரி,திருநெல்வேலி,விருதுநகர், தென்காசி தேனி,திண்டுக்கல்,மதுரை,நீலகிரி,கோவை,திருப்பூர்,கரூர், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,வேலூர்,திருப்பதூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய […]
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது.குறிப்பாக,பல இடங்களில் வெயில் சதத்தை தாண்டியும் சுட்டெரிக்கிறது.இதனால்,பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில்,அதிக வெயில் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும்,வழக்கறிஞர்கள் கட்டாயம் கருப்பு கோட் மற்றும் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்த நிலையில்,உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டன.ஆனால்,டெல்லி, மும்பை,சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல், […]
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கனமழை: அதன்படி,இன்று கன்னியாக்குமரி,திருநெல்வேலி,விருதுநகர்,தென்காசி தேனி,திண்டுக்கல்,மதுரை,நீலகிரி,கோவை,திருப்பூர்,கரூர், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,வேலூர்,திருப்பதூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.அதன்படி,பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.93 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.இதற்காக,4,092 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளன.மேலும், இத்தேர்வானது வருகின்ற மே 30 […]
மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிப்பிடும் வகையில் வண்ணக் கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் […]
திருச்சியில் வணிகர் சங்க மாநாட்டில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தையொட்டி இன்று திருச்சியில் நடைபெற்று வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி முதல்வர், வணிகர்களுக்கான சலுகைகளையும் அறிவித்தார். அதில், வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கப் பணிக்காக சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் பொழுது ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு மரத்தினை அகற்றினர். அந்த மரம் சரியாக அகற்றப்படாமல் […]
கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் […]
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதி வேந்தன் சுற்றுலா துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக சுற்றுலா பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார். பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், […]
மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 5 […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். தற்போது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. […]
சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு. அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் Hop-on, Hop-off திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் […]
இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான் என ஆளுநர் ஆர்என்.ரவி பேச்சு. சென்னை எம்ஆர்சி நகரில் மீன்வளத்துறை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மீன் வளத்துறை அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்தியாவை உலகில் முதன்மை நாடாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றும் இதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்தியா ஒரு […]
அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை, இயக்கூர்த்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகத்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் மசோதா உருவாக்கப்ட்டுள்ளது. மேலும், இந்த […]
தெற்கு அந்தமானில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர், தேனி,திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,கரூர்,நாமக்கல்,தென்காசி,திருநெல்வேலி,கன்னியாக்குமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் […]
சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி. 2023ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் சென்னையை […]
கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு. கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவரது மனுவில், தஞ்சையில் மாணவி மதமாற்றம் நடவடிக்கையால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருந்தது. இதைத்தவிர திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மதமாற்றத்தை பள்ளிகளில் […]
மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டிணப்பிரவேச விழாவில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஒருபக்கம் வரவேற்பு அளித்த நிலையில், மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அந்தவகையில், தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் […]