குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது .சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானது மிருகபலத்தை கொண்டுள்ள பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
தமிழர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவார்கள். தமிழர்கள் இந்த நாட்டிற்காக பாடுபடவில்லையா தீண்டத்தகாதவர்களாக ஏன் அமித்ஷா கருதுகிறார் .திமுக இளைஞர்களை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. பாஜக அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம்தான் அடிகோலும்.
வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள். மேலும் தமிழக முதலமைச்சருக்கு குடியுரிமை சட்டம் ஒன்றும் தெரியாது .அவர் தெரிந்தது ஒன்று தான் ஊழல் செய்வதுதான் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…