அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழகம் ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்மந்தப்பட்ட துறைகளில் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக, அப்போதை ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியல் அளித்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டியிருந்தார்.
2011ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதல், முதலமைச்சர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என பாகுபாடு இல்லாமல் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பாக கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் அள்ளுவது, பாலில் கலப்படம், முட்டை கொள்முதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஜிகே மணி தெரிவித்திருந்தார்.
மேலும், 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 200 பக்கங்களை கொண்ட ஊழல் பட்டியலை ஆளுநரிடம் பாமக வழங்கிய நிலையில், அதுகுறித்து தொடர் நினைவூட்டல்களை அனுப்பியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாமக புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து நீதிபதி பாமக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…