6 மணி நேரம் பயணிகள் தவிப்பு! இயந்திர கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரத்து!

இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் காலை 10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக காலை 10 மணி முதல் சுமார் 6 மணி நேரமாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாமல் 147 பயணிகள் தவித்து வந்தனர்.டெல்லி செல்ல இருந்த 147 பயணிகள் காலை 10 மணி முதல் சுமார் 6 மணி நேரமாக காத்திருந்த நிலையில், விமானம் ரத்து செய்யப்படுவதாக மதியம் 2 மணி அளவில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் இருந்த 147 பயணிகளில், பலருக்கு மாற்று விமானங்களில் டெல்லிக்கு செல்ல டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. சில பயணிகள் பயணத்தையே ரத்து செய்துவிட்டு, டிக்கெட் கட்டணங்களை திரும்ப பெற்றனர்.