தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் போண்டா மாவுக்கு பதிலாக பூச்சிமருந்து மாவை கலந்து போண்டா செய்துள்ள மாமியாரால் நிகழ்ந்த சோகம். அவரது மகன் சுகுமார் மற்றும் மருமகள் பாரதி திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாதவர்கள்.
இந்நிலையில், மாமியார் லட்சுமியின் கணவர் பெரியசாமி கடைக்கு சென்று போண்டாவும் செடிகளுக்கு பூச்சி மருந்தும் வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார் லட்சுமி பூச்சி மருந்தை வைத்து அறியாமல் போண்டா மாவு சுட்டதாக தெரிகிறது. இதை அறியாமல் அவரது கணவர் பெரியசாமி அவரது மருமகள் பாரதி மற்றும் போண்டா செய்த மாமியார் லட்சுமியும் சேர்ந்து சூடாக சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளியே சென்றிருந்த மகன் சுகுமார் வீட்டிற்கு வந்து போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிடும்போது வடையில் ஏதோ வாடை வருவதை அறிந்து கிச்சனுக்கு சென்று பார்த்தபோது பூச்சிமருந்து மாவில் போண்டா செய்து இருப்பதையும், போண்டா மாவு அப்படியே இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சோளிங்கர் மருத்துவமனைக்கு சென்று அனைவரும் சோதித்தபோது, மருத்துவர் இது ஒன்றும் ஆகாது வீட்டிற்கு செல்லலாம் என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த நான்கு பேருக்கும் தொடர்ச்சியாக வாந்தி மயக்கம் ஏற்பட, வாகனம் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி உடனடியாக உயிரிழந்துள்ளார். தாய், மகன், தந்தை ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மகன் சுகுமாரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத இந்த தம்பதிகளின் மரணம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினாலும், போலீசார் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…