தமிழகம் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால், முந்தைய மாதங்களில் கட்டிய கட்டணத்தையே கட்ட அரசு கூறியது.
இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுத்ததால் கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்துக்கொள்ளப்பட்டு மீதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்திருந்தது. கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த அரசு “ஊரடங்கு காலத்தில் மக்கள் முழுவதும் தினமும் வீடுகளில் முடங்கியுள்ளதால் மின்சாரம் அதிகம் உபயோகித்திருப்பதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ” ஊரடங்கால் 24 மணி நேரமும் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். யாருக்கும் ரீடிங் தெரிவதில்லை’ என நடத்தும் வேட்டையை நியாயப்படுத்தும் கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும். அப்போது வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது!” என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…