தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.286 கோடி விடுவித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…