மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது – அதிமுக எம்பி தம்பிதுரை

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தல்.
கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னதாக நான் டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளோம்.
விரைவில் மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்தும் விரிவாக விளக்க உள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025