உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே 2 முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 9 மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…