விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊர் உள்ளது.அங்கு ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயது நிரம்பிய ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.இதனிடையே இவரின் பெற்றோர் நேற்று வீட்டில் இருந்து வெளியூருக்கு சென்றுள்ளனர்.அந்த சமயத்தில் ஜெயஸ்ரீ தனியாக இருந்துள்ளார்.அப்பொழுது திடீரென்று ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது.இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.அங்கு ஜெயஸ்ரீ உடல் முழுவதும் தீ பிடித்து எறிந்த நிலையில் வலியால் துடித்துள்ளார்.
இதன் பின்னர் சிகிச்சைக்காக ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சமயத்தில் மருத்துவமனைக்கு விழுப்புரம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.அவரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார்.அவரது வாக்குமூலத்தில்,எனது வீட்டுக்குள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்துவிட்டார்.விசாரணையில் சிறுமியின் தந்தை மற்றும் முருகனுக்கு முன்பகை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…