கோவில்களை திறக்க கோரி, கோவில்கள் முன்பு ஒற்றை காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!

கோவில்களை திறக்க கோரி, கோவில்கள் முன்பு ஒற்றை காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் பாதிப்பால், 34,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அணைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், கூடலூரில், கோயில்கள் திறக்கக்கோரி, ஒற்றை காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடைபெற்றது.
கூடலழகிய பெருமாள் கோயில் முன்பு, நகர தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூரில், இந்து முன்னணி சார்பில், ஒற்றை காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.