மணிப்பூர் என்ற வார்த்தையை விட திமுக என்ற வார்த்தை தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது.! அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.!

PM Modi - Tamilnadu minister EV Velu

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரியும், பெயரில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்டு இருந்தது.

நேற்று பிரதமர் மோடி அளித்த பதிலுரையை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. பிரதமர் மோடி அளித்த பதிலுரையில் திமுக பற்றியும், திமுக அமைச்சர்கள் பற்றியும் பிரதமர் மோடி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

தற்போது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தான் பிரதமரை நாடாளுமன்றம் வர வைக்க வேண்டியுள்ளது. தற்போது ஜனநாயகம் அந்த நிலையில் தான் உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் திட்டமிட்ட வன்முறையால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பெண்க மீது பாலியல் வன்முறைகள் அரங்கேறியுள்ளன. உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள் என பார்த்தால், ஆளும்கட்சியினர் அனைவரும் திமுகவை குறிவைத்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதன் மூலம் மணிப்பூர் கலவரத்தில் நிர்வாக தோல்வி என்பதை பாஜக அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டு விட்டது.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானி, திமுக எம்பி  ஆ.ராசாவை சிறைக்கு அனுப்புவோம் என்ற படி பேசியிருந்தார். அப்போ, நீதித்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா என ஆ.ராசா கேட்கவே, அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் ஏதும் கூறவில்லை என எ.வ.வேலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் பற்றி பேசுகிறார். அதே போல, பிரதமர் மோடியும் தமிழ்நாடு பற்றி பேசுகிறார். எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது ஐந்தாம் மாநிலம் பபற்றி பேச வேண்டும் என்று கூட தெரியாமல் பேசுகின்றனர் என எ.வ.வேலு விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகம். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், அதுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களை எல்லாம் இணைக்கின்ற, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற கட்சி என்ற பயம்தான் பிரதமரையும் அமைச்சர்களையும் இப்படிப் பதற்றத்துடன் பேச வைத்திருக்கிறது. என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் எவ.வேலு குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்