முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் ?

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பாமக சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது.ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இதனால் மூத்த அமைச்சர்கள் , பாமக நிறுவனர் ராமதாஸுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இந்நிலையில் தான் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பில் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025