#BREAKING: போக்சோவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ..!

கடந்த 2018-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த பெண் திருமண வயதை எட்டியுள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணும், அவரது தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்தனர். அதில், குற்றம் சட்டப்பட்டவருக்கு ஆதரவாகவும், பெண்ணின் திருமணத்திற்கு இந்த வழக்கு தடையாக உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம். பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கை இழந்து விடுகின்றன என கருத்து தெரிவித்து, அந்த இளைஞர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில பரிசீலித்து முடிவுஎடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025