பழமையான கட்டிடம் இடிந்து காவலர் சரவணன் உயிரிழப்பு!

மதுரையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு.
மதுரை கீழவெளி பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து காவலர் சரவணன் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சரவணன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்த போது பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025