மதுபோதையில் காவலர் ஓட்டிய கார் மோதி முதியவர் உயிரிழப்பு..!

மதுபோதையில் காவலர் ஓட்டிய கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.
சென்னை விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது வீட்டின் அருகே சாலை ஓரமாக அமர்ந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது காவலர் ரஞ்சித் என்பதும் அவர் குடிபோதையில் காரை ஒட்டியது தெரியவந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025