பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தள்ளி வைப்பு? – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Published by
Edison

முதலாமாண்டு பொறியியல் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் எனவும்,ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும்  தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்.கழகம் முடிவு – மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சி:

“2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வினை இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

college

60 நாட்கள் மட்டுமே வகுப்புகள்:

பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 60 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டதாகவும்,நவம்பர் மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக படிக்க வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முதல் பருவத் தேர்விற்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டடதாகவும் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்பு மையமாக செயல்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் நிலைமை இதைவிட மோசமானது என்றும், அவர்களுக்கு 40 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடினமான தருணம் – பேராசிரியர்கள் கருத்து:

கொரோனா கொடுந்தொற்று காரணமாக,பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியர் எழுதாத சூழ்நிலையில்,முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்பறைகளில் படிப்பதற்கு போதுமான நேரம் தரப்படாத சூழ்நிலையில்,அவர்களுக்கு நேரடித் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாகவும், பொறியியல் முதலாமாண்டு பயிலும் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மாணவ, மாணவியர்களில் பெரும்பாலானோர் படிப்பிற்கான உதவித் தொகையை சார்ந்திருக்கும் ஏழையெளியவர்கள் என்றும், இது அவர்களுக்கு கடினமான தருணம் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பு?:

மேலும், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான எட்டாம் பருவத் தேர்வைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்த சூழ்நிலையில், அனைத்து பருவத் தேர்வுகளும் வகுப்பறைகளில் நடத்தப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், பருவத் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டுமென்றும் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் தேர்வு:

நேரடி பருவத் தேர்விற்கு தயாராவதற்குத் தேவையான கால அவகாசம் மாணவ, மாணவியருக்கு இல்லாத நிலையில், பொறியியல் பயிலும் மாணவ,மாணவியரின் முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கவும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து, பொறியியல் முதலாமாண்டு மாணவ, மாணவியரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

18 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

4 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

11 hours ago