திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நவ.16-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாகவும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அனைத்து பள்ளிகளிலும் நவ.9ம் தேதி நடததப்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது. இதை அறிவிக்கும் முன்பன்றோ செய்திருக்க வேண்டும். ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அரசுக்கு தெரியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…