தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த பிரேமலதா

மறைந்த விஜயகாந்தின் உருவப்படத்தை அவரின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா இன்று கட்சி அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார். திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்ந நிலையில், தேமுதிக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருறப் படம் இன்று திறக்கப்பட்டது.

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு! 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

விஜயகாந்தின் உருவப் படத்தை அவரின் மனைவியும், தேமுதிகவின் பொதுச் செயலாளருமான பிரேமலதா திறந்து வைத்தார். பின்னர் அவர் படத்தை நோக்கி வணக்கியபடி கண்ணீர் சிந்தினார். படத்திறப்பு நிகழ்வின் போது பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே சுதீஷும் உடனிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்