ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.!
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

சென்னை : குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் நேற்றிரவு அறிவித்திருந்த நிலையில், அவரது விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த தகவல் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி உடனடியாக அமலுக்கு வந்தது. ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமாவில் உடல்நலக் காரணங்களை குறிப்பிட்டு, உடனடியாக பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த திடீர் ராஜினாமாவால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் புதிய துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது.