சென்னை : குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் நேற்றிரவு அறிவித்திருந்த நிலையில், அவரது விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த தகவல் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. […]